வினா வங்கி - 100+1 With Answers


1. திரிகடுகத்தில் உள்ள பாடல் எண்ணிக்கை :100

2. தமிழர் அருமருந்து :ஏலாதி

3களவழி நாற்பது எது பற்றிய நூல் :போர் பற்றிய நூல்

4. தமிழின் மிக பெரிய நூல் :கம்பராமாயணம்

5. கம்பர் சமாதி எங்கு உள்ளது :நாட்டாரசன் கோட்டை

6. இலங்கையில் சீதை இருந்த இடம் ":அசோக வானம்

7. தமிழர் கருவூலம் :புறநானூறு

8. ராமன் கங்கை ஆற்றை கடக்க உதவியவன் :குகன்

9. கதிகை பொருள் :ஆபரணம்

10. கோவலன் மனைவி :கண்ணகி மாதவி

11. பாண்டிய மன்னன் மனைவி :கோப்பெருந்தேவி

12. மடக் கொடி :கண்ணகி

13. இளங்கோவடிகள் தம்பி யார் :சேரன் செங்குட்டுவன்

14. 99 பூக்கள் பற்றிய நூல் :குரிஞ்சிபாட்டு

15. சங்க இலக்கியம் :பத்துபாட்டும் எட்டு தொகையும்

16. சங்க கால மொத்த வரிகள் :26350

17. ஓளவைக்கு நெல்லி கனி கொடுத்தது யார் :அதியமான்

18. கபிலரை ஆதரித்த மன்னன் :பாரி

19. கபிலர் நண்பர் :பரணர்

20. அகநானூறு பிரிவு :3

21. ஏறு தழுவல் :முல்லை

22. கலித்தொகை பாடல் :150

23. கண்ணகி கால்சிலம்பு எதனால் ஆனது :மாணிக்கம்

24. கள்வநோ என் கணவன் என கூறியது யார் :கண்ணகி

25. மணிமேகலை காதை :30

26. நாயன்மார் எத்தனை பேர் :63

27. தமிழ் கவிஞர்கள் இளவரசன் :திருத்தக்க தேவர்

29. நாயன்மார்களில் பெண் எத்தனை :3

30.தொகை அடியார் :9

31. திராவிட திசு :ஞானசம்பந்தர்

32. அழுது ஆடியடைந்த அன்பர:மாணிக்கவாசகர்

33. சைவ வேதம் :திரு வாசகம்

34. திருமந்திர பாடல் :3000

35. நாளிகேரம : தென்னை

36. போலி புலவர் செவியை அறுத்தது :வில்லிபுத்தூரர்

37. தமிழ் முதல் பரணி :கலிங்கத்து பரணி

38. சிற்றிலக்கியம் வகை :96

39. இஸ்லாமிய கம்பன் :உமறுப் புலவர்

40. சைவ திருமுறை எத்தனை :12

41. பாரதி இயற்பெயர் :சுப்பையா

42. சோழர்கள் பற்றிய நூல் :மூவருலா

43. பிள்ளைதமிழ் பருவம் :10

44. சித்தர் எத்தனை பேர் :18

45. நாடக தந்தை :பம்மல்

46. குழந்தை கவி :அழ வள்ளியப்பா

47. முதல் தமிழ் சங்கம் :தென் மதுரை

48. இரண்டாம் தமிழ் சங்கம் :கடாபுரம்

49. மூன்றாம் சங்கம் :மதுரை

50. நான்காம் சங்கம் :மதுரை

. 51. மண்சப்தாரி முறை :அக்பர்

52. சௌகான் டேல்லி கைப்பற்றிய ஆண்டு :12 நூற்றாண்டு

53. 1320. பஞ்சாப் ஆளுநர் :காசிம் மாலிக்

54. செப்பு நாணயம் அறிமுகம் :முகம்மது பின் தூக்ளக்

55. தைமுர் படையெடுப்பு :1398

56. துளுவ மரபு ஆரம்பித்தது :கிருஷ்ண தேவாரயர்

57. முசோலினியின் மறைவுக்குப் பின் மலர்ந்தது :மக்களாட்சி

58. I NA முக்கிய உறுப்புக்கள் எத்தனை :6

59. நில குத்தகை சட்டம் :பெண்டிங் பிரபு

60. சிவா பிறந்த இடம் :வத்தல குண்டு

61. 1940 ல் காமராஜர் வார்தா சென்று யாரை சந்தித்தார் :காந்தி

62. பொருளாதர சமூக மன்றத்தின் உறுப்பினர் பதவி காலம் :9

63. பாகிஸ்தான் கோரிக்கை :1940

64. பெரியார் எப்போது காங்கிரஸ் தலைவர் ஆனார் :1923

65. உலக வணிக அமைப்புகள் :ஜி 12

66. கேஸரி பத்திரிக்கை தலைவர் :திலகர்

67. மாஸ்கோ நகரத்தை அலித்தவர் :ஸ்டாலின்

68. பெண் வன்கொடுமை சட்டம் :1921

69. உலக அமைத்திக்கு ஏற்ப்பட்ட பங்கம் :முதல் உலக போர்

70. போப் எழுச்சி பெற்ற ஆண்டு :6

71. நிலமான்ய சட்டம் வீழ்ச்சி காரணம் :சிலுவைக் போர்

72. 1415. பொசுக்க பட்ட மத குரு :ஜான்ஹஸ்

73. நடனம் ஆடுபவர் :விரலியர்

74. ரோமானிய வரலாற்றை எழுதியது யார் :லிவி

75. ரோமனிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது :3

76. மறுமலர்ச்சி தோன்றிய காலம் :16 நூற்றாண்டு

77. முதல் சிலுவைக் போரில் ஜெர்மனியின் அரசர் :4ஆம் ஹேன்ரி

78. மாக்ண கார்ட்டா வெளியிட்ட ஆண்டு :1215

79. தரமான பாதை அமைக்கும் முறை :மெக் ஆதம்

80. இன்குஷிசன் பொருள் :விசாரணை நீதி மன்றம்

81. உலக பெண்கள் ஆண்டு :1978

82. விதவை மறுமண சட்டம் :1856

8. JRY திட்டம் :1989

84. NREP வருடம் :1980

85. உலக எழுத்தறிவு தினம் :செப்டெம்பர் 8

86. தொட்டில் குழந்தை திட்டம் :1992

87. சம ஊதிய சட்டம் :1976

88. வியன்னா பிரகடனம் :1993

89. பேருகால சட்டம் :1961

90. மனித உரிமை தினம் :டிசம்பர் 10

91. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் :copra

92. கிராம பொருளாதரம் :நேரு

93. வெப்ப மண்டல முக்கிய பயிர் "நெல்

94. ஒரு திட்டமான சராசரி காலம் :30

95. அயனி அடுக்கு எது வரை :80-500 வரை

96. குஜராத் நிலநடுக்கம் :26 ஜனவரி 2001

97. சுனாமி எம்மொழி சொல் :ஜப்பன்

98. பசுபிக் என்ன வடிவம் :முக்கோணம்

99. சிலிகா அலுமினியத்தால் ஆனது :சியால்

100. I NA சபையில் பணியாற்றும் மொத்த நபர்கள் :7500

 TNPSC பொதுத்தமிழ் பாடக்குறிப்புகள் பகுதி – 8



விளக்கம், உதாரணங்கள் மற்றும் மாதிரி வினா – விடை அடங்கிய பயனுள்ள முழுமையான TNPSC பாடக்குறிப்புகளின் தொகுப்பு

(TNPSC General Tamil Study Material include with Definition, Examples and Model Question and Answer)

பிழை திருத்தம் மரபு ஒருமை பன்மை சந்திப்பிழை,  

வழுவுச்சொல் பிறமொழிச் சொல்

இந்த வகை வினாக்களில் ஐந்து வகையிலான கேள்விகள் 

கேட்கப்படலாம்.


அ. சந்திப்பிழை நீக்குதல்

இரண்டு சொற்கள் சேரும் போது ஏற்படும் மாற்றத்தில் பிழைகளே 

சந்திப்பிழைகளாகும். அதாவது, ஏற்கனவே இருக்கின்ற விகுதியோடு 

இன்னொரு சொல் இணையும் போது ஏற்படும் மாற்றங்கள்.

உதாரணமாக – போர் செயல் போர்ச்செயல் என மாறுவதைக் 

கூறலாம்.

இவ்வகையான வினாக்களுக்கு நீங்கள் தயாராக வேண்டுமென்றால், 

வல்லினம் மிகும் இடங்கள் மற்றும் வல்லினம் மிகா இடங்கள் எவை 

என்பவற்றை அறிந்திருக்க வேண்டும்.

ஆ. ஒருமை பன்மை கண்டறிதல்

இது ஒரு எளிய வகை வினா, தேர்வரின் தமிழறிவை சோதிக்கும் 

வண்ணம், வாக்கியங்களில் வரும் ஒருமை, பன்மை (Singular / Plural

வேறுபாடுகளை கண்டறியும் திறனை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.


உதாரணம் – ஒருமை, பன்மை பிழைகளைக் கண்டறிக?

அ. தமிழ்நாடு அணி போட்டியில் வென்றனர்.

ஆ. அணி போட்டியில் வென்றார்கள் தமிழ்நாடு.

இ. தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது.

ஈ. தமிழ்நாடு அணி போட்டியில் வென்றன.

விடை - இ. தமிழ்நாடு அணி போட்டியில் வென்றது.


தமிழ்நாடு என்ற பெயர் ஒருமையில் வந்தால் வென்றது என்பது 

ஒருமையிலேயே வரவேண்டும்.


இ. மரபு பிழை கண்டறிதல்.

நம் அன்றாட வாழ்வில் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல 

சொற்களைப் பயன்படுத்தி வருகின்றோம். அவை தூய தமிழ் 

வார்த்தைகளாக இல்லாமல் கூட இருக்கலாம். இவ்வகை வினாக்கள் 

அப்படிப்பட்ட மரபுப் பிழைகளை பிரித்தறியும் உங்கள் திறமையை 

சோதிக்கும் வண்ணம் இருக்கும்.

உதாரணம் - மரபுப்பிழையை நீக்குக?

அ. தென்னங்குட்டி

ஆ. தென்னங்கன்று

இ. தென்னங்கண்ணு

ஈ. தென்னம்பிள்ளை

விடை - ஆ. தென்னங்கன்று


ஈ. வழுவுச்சொல் கண்டறிதல்


சில தமிழ் சொற்களை நாம் பெரும்பாலான சமயங்களில் வழுவுச் 

சொற்களாகவே பயன்படுத்தி வருகின்றோம். “ தலையணை” என்ற 

சொல்லை “தலகாணி“ என்றும் “மனம்“ என்ற சொல்லை “மனசு“, 

“மனது“ என்றும் மாறிப் பயன்படுத்துவதைக் கூறலாம். இவ்வகை 

வினாக்களில் அப்படிப்பட்ட வழுவுச்சொற்களற்ற தூய்மையான தமிழ் 

வார்த்தையைக் கண்டறிய வேண்டும்.

 உதாரணம் - கீழ்கண்டவற்றுள் வழுவு அற்ற சொல்லைக் கண்டறிக?
அ. அறுவா மனை.

ஆ. அரிவாள் மனை.

இ. அறுவாள் மனை.

ஈ. அரிவாள் மனை.

விடை – ஆ. அரிவாள் மனை.


உ. பிறமொழிச் சொல் நீக்குதல்

நாம் பேசும் வழக்கில் அனேக தமிழ் அல்லாத மொழிகளையும் 

சேர்த்து பேசுகின்றோம். இதில் ஆங்கில மொழியின் ஆதிக்கமே அதிகம். இவ்வகை வினாக்களில் அப்படிப்பட்ட பிறமொழி கலப்பினைக் கண்டறிந்து நீக்க வேண்டும்.

உதாரணம் - பிறமொழி சொற்களை நீக்குக?

அ. வருசக் கடைசி

ஆ. வருடக் கடைசி

இ. வருடக் கடசி

ஈ. ஆண்டுக் கடைசி

விடை - ஈ. ஆண்டுக் கடைசி


எப்படித் தயாராவது?


இப்பகுதி வினாக்களையும் நீங்கள் சிறப்பாக எதிர்கொள்வதற்கு 6-ம் 

வகுப்பு முதல் 10-ம் வகுப்பு தமிழ் பாடப்பகுதிகளை, குறிப்பாக 



9,10ஆவது தமிழ் புத்தகங்களை படிக்கவும்.